குமரி மாவட்டம் புதுக்கடை அருகே 4 பேரை கடிக்க தெருநாய் விரட்டிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விரிவிளை செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை தெரு நாய் விரட்டிய நிலையில், அவர்கள் எதிர் வீட்டுக்குள் சென்று தப்பித்தனர். மேலும், அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களையும் கடிக்க முற்பட்டு நாய் துரத்தியது. அப்போது நாயிடமிருந்து தப்பிக்க முயன்றதில் நபர் காயமடைந்தார்.