விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகையில் 32 அடி உயரம் கொண்ட அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.