திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயியான பழனிசாமி-க்கும் அவரது மருமகன் ராஜ்குமாருக்கும் இடையே கடந்த 6 வருடங்களாகவே குடும்பத்த தகராறு நீடித்து வந்ததாக தெரிகிறது.குடும்ப பிரச்சனை நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பிரச்சனை தலைதூக்க, ஆத்திரத்தில் எல்லப்பாளையத்துக்கு வந்த மருமகன் ராஜ்குமார் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மாமனார் பழனிசாமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, மீண்டும் வீட்டுக்கே திரும்பிச்சென்று அதே துப்பாக்கியால் தன்னை தானே நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.