ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பள்ளி ஆண்டு விழாவில், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் கணேசன் என்பவர் பங்கேற்று பள்ளி மாணவர்களிடையே பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் சுவிதா அவர்களை அழைத்தாகவும் அதனால் அவரது கணவரான கணேசனும், பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று பாடல் பாடியதாகவும், கணேசனை, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.