விவசாய நிலத்துக்கு சென்ற மூதாட்டியை காணவில்லை என பல இடங்களில் தேடி அலைந்த உறவினர்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் சடலமாக கிடந்த மூதாட்டி. மகன்கள் மற்றும் மகள்களை தனித்தனியாக அழைத்து விசாரித்த போலீஸ். விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள். மூதாட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? கொடூர கொலையின் பின்னணி என்ன?பேச்சியம்மாளை காணவில்லை என போலீசாரிடம் புகார்ஜனவரி 3ம் தேதி. விவசாய நிலத்துக்கு வேலைக்கு போன பேச்சியம்மாள்-ங்குற மூதாட்டி சாயங்காலம் 6 மணியாகியும் வீட்டுக்கு திரும்பல. இதனால பேச்சியம்மாளோட மகன்களும், பக்கத்து வீட்டுக்காரங்களும் விவசாய நிலத்துக்கு போய் பாத்துருக்காங்க. அங்க மூதாட்டிய காணல. மூதாட்டி அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ருப்பாங்க, ரெண்டு, மூணு நாட்கள்ல அவங்களே வீட்டுக்கு திரும்பி வந்துருவாங்கன்னு உறவினர்கள் வெயிட் பண்ணி பாத்துருக்காங்க. ஆனா அப்பவும் மூதாட்டி வரவேயில்லை. இதனால ஒரு வாரம் கழிச்சு மூதாட்டிய காணும்ன்னு அவங்க சொந்தக்காரங்க போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுட்டாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மூதாட்டிய தேடி பல இடங்கள்ல அலைஞ்சுருக்காங்க. இதுக்கிடையில ஊருக்கு ஒதுக்குப்புறமா உள்ள கிணத்துல இருந்து ஒரே துர்நாற்றம் வீசிருக்கு. இதனால கிராம மக்கள் அந்த கிணத்துக் கிட்ட போய் பாத்துருக்காங்க. அதுல பேச்சியம்மாளோட சடலம் தண்ணீர்ல மிதந்தபடி கிடந்துருக்கு.முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த சக்திவேல்இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், சடலத்த மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சுருக்காங்க. மூதாட்டிய நகைக்காக யாரும் கொலை பண்ணி கிணத்துல தூக்கி வீசிட்டாங்களா? அல்லது கிணத்துக்குள்ள தவறி விழுந்து உயிரிழந்துட்டாங்களான்னு பல்வேறு கோணத்துல விசாரிக்க ஆரம்பிச்சுருக்காங்க போலீஸ். அடுத்து மூதாட்டியோட பசங்க ஒவ்வொருத்தரையும் தனித்தனியா கூப்டும் விசாரணை பண்ணிருக்காங்க. அப்ப மூதாட்டியோட கடைசி மகன், எங்க அண்ணன் சக்திவேல் தான், அடிக்கடி சொத்த கேட்டு அம்மா கிட்ட பிரச்னை பண்ணிட்டே இருப்பான்னு சொல்லிருக்காரு. அவரு சொன்ன தகவல வச்சு சக்திவேல் கிட்ட விசாரிச்சுருக்காங்க போலீஸ். போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு சக்திவேல் முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சுருக்காரு. இதனால சக்திவேல கஸ்டடியில எடுத்த போலீஸ் அவரு கிட்ட கிடுக்குப்பிடி விசாரணையில இறங்குனாங்க.மதுபோதைக்கு அடிமையாகி கிடந்த சக்திவேல்தூத்துக்குடி, விளாத்திகுளத்துல உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் - பேச்சியம்மாள் தம்பதிக்கு 4 மகன்கள், 2 மகள்கள் இருக்காங்க. இவங்க எல்லாருமே கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தோட தனித்தனியா வாழ்ந்துட்டு இருக்காங்க. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி துரைசிங்கம் உயிரிழந்துட்டாரு. அன்னையில இருந்து மூதாட்டி பேச்சியம்மாள் யாரோட உதவியும் இல்லாம தனியா வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. பேச்சியம்மாளுக்கு தனது சொந்த கிராமத்துலையே நிறைய விவசாய நிலங்கள் இருக்குது. இதுக்கிடையில இவங்களோட மூத்த மகன் சக்திவேல் மதுபோதைக்கு அடிமையாகிட்டாரு. எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாம ஊதாரியா ஊர் சுத்திக்கிட்டு மதுவே கதின்னு கிடந்துருக்காரு. அப்பப்ப, தன்னோட தாய் வீட்டுக்கு போற சக்திவேல், சொத்த பிரிச்சு தரும்படி தாய் கிட்ட சண்டை போட்ருக்காரு. அதுக்கு பேச்சியம்மாள், உன் ஒருத்தனுக்கு மட்டும் என்னால சொத்த பிரிச்சு தர முடியாது, உன் கூட பொறந்தவங்க எல்லாரும் வரட்டும், அப்ப எல்லாரும் சரிக்கு சமமா சொத்த பிரிச்சு தர்றேன்னு சொல்லிருக்காங்க.சக்திவேல், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸ்இதனால சக்திவேல், தன்னோட நண்பர் முருகன் வீட்டுக்கு போய்ட்டு மதுகுடிக்க பணம் கேட்ருக்காரு. அதுக்கு முருகன், உங்க அம்மா கிட்ட ஏகப்பட்ட சொத்து இருக்குது, அதவிட்டுட்டு என்கிட்ட வந்து பணம் கேட்டுட்டு இருக்கன்னு சொல்லி கிண்டல் பண்ணிருக்காரு. இதனால கோபமான சக்திவேல் தொடர்ந்து தன்னோட தாய் கிட்ட சொத்த பிரிச்சு தரச்சொல்லி பிரச்னை பண்ணிருக்காரு. சம்பவத்தனைக்கு சக்திவேலும், முருகனும் ஃபுல் போதையில இருந்துருக்காங்க. அப்ப நேரா விவசாய நிலத்துக்கு போன சக்திவேல், அங்க வேலை பாத்துட்டு இருந்த தாய் கிட்ட மறுபடியும் சொத்த கேட்டு பிரச்னை பண்ணிருக்காரு. அப்ப ரெண்டு பேருக்கு இடையில பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. இதனால பேச்சியம்மாள சரமாரியா தாக்குன சக்திவேல், துண்ட வச்சு மூதாட்டிய கழுத்த நெரிச்சு துடிக்க துடிக்க கொன்னுருக்காரு. அடுத்து முருகன் கூட சேர்ந்து சடலத்த ஊருக்கு ஒதுக்குப்புறமா உள்ள கிணத்துல தூக்கி வீசிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி ஊர்லையே இருந்துருக்காரு சக்திவேல். ஆனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ட வச்சும் கடைசி மகன் சொன்ன தகவல வச்சும் சக்திவேல் தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், அவர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. இதையும் பாருங்கள் - இரும்பு பெட்டிக்குள் மனித எலும்புகள்