5 லட்சம் ரூபாய் கடன் தொகைக்காக தனது தந்தையை ரவுடிகள் கடத்தி சென்று அடித்து துன்புறுத்துவதாக மகன் மற்றும் மகள் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். திருஇந்தளூர் பகுதியை சேர்ந்த நடராஜன், சிதம்பரத்தை சேர்ந்த பைனான்சியர் பழனிசாமியிடம் வியாபாரத்திற்காக 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பழனிசாமி விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால் பணத்தை திருப்பி கேட்டதையடுத்து, முதலில் 5 லட்சம் தருவதற்கு நடராஜன் அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை நடராஜனை, பழனிசாமியின் ஆட்கள் கடத்தி சென்றதாக அவரது மகன் மணிகண்டன், சங்கீதா தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் :சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்... உத்தமபாளையம் - திண்டுக்கல் சாலையை சீரமைக்க கோரிக்கை