சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட தயாராக இருந்த விமானத்தின் இன்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து துபாய் செல்ல எமிரேட்ஸ் விமானத்தில் 230 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது இன்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்த ஊழியர்கள் உடனே தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 230 பயணிகளும் உயிர்தப்பினர்.