9 அமாவாசைக்குப் பின் தமிழகத்தில் நிலைமை மாறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆருடம் கூறினார். திருச்சி மரக்கடை பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர், வரும் தேர்தலில் அதிமுக சின்னம் பொருத்திய பொத்தான் பொத்துப் போகும் அளவுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என உறுதிபட தெரிவித்தார். மேலும், இபிஎஸ்தான் முதலமைச்சராக வருவார் என அனைவரும் பேசுவதாக சி.விஜயபாஸ்கர் கூறினார்.இதையும் படியுங்கள் : நாகப்பட்டினம் நகராட்சியின் நகர்மன்ற மாதாந்திர கூட்டம்... Justice for Ajithkumar பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்