தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரம் பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைத்து போலீஸார் அடைத்தனர். மேலும், பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே பொதுமக்களோ, வாகனங்களோ செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : யாத்திரை சென்றவர்களிடையே கடும் மோதல்... கம்புகளை கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சி