தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியம் குறைவாக உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா தொற்றால் வரும் சளி. காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் சரியாகிவிடும் என்றார். மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு இதுவரை அறிவுறுத்தவில்லை என கூறினார்.