வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி, ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நவராத்திரி ஏழாவது நாள் உற்சவத்தில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தனலட்சுமி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளிய நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.