நாகை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட விசிக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர். திருமருகல் ஒன்றியம் சேஷமூலை அம்பேத்கர் நகரை சேர்ந்த சக்திவேல் விசிகவின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் அரசலாற்று கரையோரம் டிப்பர் லாரி மூலம் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டுவதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சக்திவேலை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.