ஒகேனக்கல்லில் நடைபெற்று வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்டமாக 7 ஆயிரத்து 955 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை பார்வையிட்ட தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.