சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான 27 புள்ளி 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8ஆயிரத்து779 கோடி ரூபாய் அளவிலான பணிக்கு அரசு நிர்வாக ரீதியாக ஒப்புதல் வழங்கியுள்ளது.