சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போலீஸாரின் கைகளை தட்டிவிட்டு SDPI கட்சியினர் கொடியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய கடை வீதியில் புதிதாக கட்சி அலுவலகம் திறந்த SDPI கட்சியினர், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்ற முயன்றனர். ஆனால், கொடியேற்ற அனுமதி பெறவில்லை எனக் கூறி, உதவி ஆய்வாளர் செல்வபிரபு உள்ளிட்ட போலீஸார் தடுத்த நிலையில், அவர்களின் கையை தட்டிவிட்டு முழக்கங்கள் எழுப்பியபடியே கட்சி கொடியை ஏற்றினர்.