மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதை சுற்றுலாப்பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு களித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பரவலாக பெய்த மழையால் பேருந்து நிலையம், ஏரி சாலை, அண்ணா நகர், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென தரையிறங்கிய பனிமூட்டத்தால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.