தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீனதயாளன்-வினிதா காதல் ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் செய்யாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடியை போலீசார் காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி கதறி அழுதனர்.