கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தொடர் கனமழை காரணமாக சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீரால் 3 கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. மச்சகுளம் மற்றும் நிர்ணயகுளம் நிரம்பி வெளியேறிய தண்ணீர், சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.