விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு சேதப்படுத்திய தனியார் கல்குவாரி லாரியை சிறைபிடித்து, அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேதமடைந்த சாலையை சரி செய்வதற்கு பதிலாக, அதன் வழியாக செல்ல முடியாத அளவிற்கு ஏரி மணலை கொட்டியதால் ஆத்திரம் அடைந்தனர்.