கிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான பட்டா இடத்தில் சாலை அமைக்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உமாபதி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போச்சம்பள்ளியில் சிப்காட் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால், சாலை அமைப்பதை நிறுத்த வேண்டுமென அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, உமாபதியை கைது செய்ததையடுத்து, கிராம மக்கள் களைந்து சென்றனர்.