பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் கிராமத்தில் சபரி நகர் மனைப் பிரிவுக்கு சாலை வசதி அமைத்துத் தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆட்சியரின் முடிவு பற்றி மனுதாரருக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.