கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தில் சாலையை ஒட்டியவாறு கீழே தொங்கும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏரியின் ஓரம் சாலையை ஒட்டியவாறு மக்களை அச்சுறுத்தும் வகையில் தொங்கும் நிலையில் காணப்படுவதால் அதனை சீரமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.