நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் கோயில் நிலத்தில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய மறுக்கும் மக்கள், அறநிலையத்துறையை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் பிள்ளைத்தெரு வாசல் பகுதியில் குடியிருப்பதாகவும் தங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.