சென்னை அடுத்த பூந்தமல்லியில் குளிர்சாதன பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியாருக்கு சொந்தமான ரெப்பெஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வந்தது.இதில் திடீரென தீப்பற்றி, குளிரூட்டும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகள் வெடித்து சிதறிய நிலையில், மளமளவென பொருட்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தன. அப்பகுதி முழுவதும் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.