வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.குடியாத்தம் அடுத்த நேருஜி நகர் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவர் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் ஒரு பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைக்கப்படிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதாக தெரிகிறது.இதனால் புகை வெளியேறி தீ மளமளவென எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.