தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தை ஆளும் தலைவராக உள்ளதாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில், அவரது உருவ படத்திற்கு செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாக சசிகலா தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் எதுவும் சொல்லாத செங்கோட்டையன் கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்.