நடிகர் விஜய் அரசியலில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக, சிவப்பு- மஞ்சள் நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தவெகவின் கட்சிக் கொடி என்பது வெறும் அடையாளமல்ல என்றும், அது தமிழ் வரலாறு, கலாச்சாரம், அரசியலை உள்ளடக்கிய கொள்கை வடிவமைப்பு என்றும், புரட்சியை குறிக்க சிவப்பும், நம்பிக்கையை குறிக்க மஞ்சளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், சிவப்பு- மஞ்சள்- சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.