கொடைக்கானலில் மழைக்கு பின், ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ரம்யமாக காட்சியளித்த வானவில், சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று நண்பகல் முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. மழை பெய்ததை தொடர்ந்து பசுமையான மலை பகுதிகளுக்கு இடையே ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வானவில் ரம்யமாக காட்சி அளித்தது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொது மக்கள் வானவில்லை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.