தருமபுரி அருகே மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் மண் சரிவை தடுக்கும் வகையில், மூன்று இடங்களில் மூன்றடுக்கு கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முத்தம்பட்டி மலைப்பகுதியில், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தருமபுரி - சேலம் ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ரயில் பாதையில் ஏற்படும் மண் சரிவை தடுக்கும் விதமாக மூன்று இடங்களில், 100 அடி உயரத்திற்கு சணல் மற்றும் கம்பிகளை கொண்டு வலை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.