திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழை ஓய்ந்தபிறகும் ரயில்வே தரைப்பாலத்தில் கழிவு கலந்த மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த 20 நாட்களில் தரைப்பாலமானது 11-வது முறையாக மழை நீர் கலந்த கழிவு நீரால் சூழப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக கூறும் பொதுமக்கள், மழை ஓய்ந்தாலும் பாலத்தின் மேல் பூச்சு மற்றும் பக்கவாட்டு சுவர் வழியாக வடியும் நீரால் பாலத்தில் தண்ணீர் வடிவதில்லை என குற்றம்சாட்டினர். தேங்கி நிற்கும் நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுள்ளதால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.