கன்னியாகுமரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சபீக் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த சபீக் என்ற பிரபல ரவுடியை நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அப்போது ரவுடி சபீக் தப்பி ஓட முயற்சித்ததில் கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது.