குமரி மாவட்ட அணைக்கட்டுகளில் போதிய நீர் இருப்பு இருந்த நிலையில், ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என நெல்லை மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கால்வாய் நீரை நம்பி 52 குளங்கள், 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக குமரி மாவட்ட அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாயம் செய்ய முடியாமல் போனதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.