செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தரக் கோரி, பால்வாடி அமைக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருங்களத்தூர் சதானந்தபுரம் - நெடுங்குன்றம் சாலை விரிவாக்கம் செய்தபோது விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட நிலையில், காலி இடத்தில் கோவில் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், பால்வாடி கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.