விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், சாலைகளின் உயரத்தை அதிகரித்து கொண்டே வந்தால் மழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் உள்ள சாலையில் கவுன்சிலர் மாலா தலைமையில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சேதமான சிமெண்ட் சாலைகளை பெயர்த்து எடுக்காமலேயே புதிய சாலை அமைத்தால் மழை காலங்களில் அருகில் உள்ள பிரண்டை குளம் கண்மாயில் இருந்து வரும் நீர் வீடுகளுக்குள் புகும் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.