திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆபத்தான முறையில் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே, சிறு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, மங்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில், ஆரணி ஆற்றின் குறுக்கே சிறு பாலம் கட்டி, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ஆந்திராவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆபத்தான முறையில் பொது மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.