கொட்டும் மழையிலும், பரதக் கலைஞர்கள் நாட்டியமாடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தியதை கண்டு பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டப மேடையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திடீரென தூரலுடன் தொடங்கிய மழை, பின்னர் இடி, மின்னல், காற்றுடன் கனமழையாக பெய்தது.