விருத்தாசலத்தின் பல்வேறு பகுதிகளில், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இன்று காலை முதல் வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்தன. இந்நிலையில், 4 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.