கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கிறிஸ்தவ ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் சாண்டா கிளாஸ் பேரணி நடைபெற்றது. சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து மேளதாளத்துடன் தொடங்கிய ஊர்வலத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சைக்கிள்களிலும், தள்ளுவண்டிகளிலும் பரிசுகளை சுமந்து கொண்டு சென்றவர்கள், அவற்றை சாலையோரங்களில் நின்று கண்டுகளித்த மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்