ஆட்டோ ஸ்டேண்ட் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் வெளியூர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அதிகார தோரணையில் மிரட்டி, பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசும் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி மற்றோரு தரப்புக்கு தொலைத்துவிடுவேன், குத்திவிடுவேன் என பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்.