திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொறியாளரை வெட்டிவிட்டு தப்பி சென்ற பாஜக பிரமுகர் உட்பட 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். விழல்காரத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா குறித்த கூட்டம் நடத்த முக்கியஸ்தர்கள் கூடியிருந்த நிலையில் கூட்டத்தில் உடன்பாடு இல்லாத, பாஜகவின் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் திருமேனி என்பவர் அவரது நண்பர்களுடன் இணைந்து, அங்கிருந்த பொறியாளர் செழியனை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த செழியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பி சென்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.