சென்னை, போரூர்... அழுதபடியே தாத்தா வீட்டிற்கு சென்ற இரண்டு குழந்தைகள். பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்த தாத்தா. ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் சடலமாக கிடந்த பெண்ணை கண்டு அதிர்ச்சி. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸ். தலைமறைவாக இருந்த நபரை பிடித்து விசாரணை. இளம்பெண்ணை கொலை செய்த நபர் யார்? நடந்தது என்ன?அதிகாலை நேரம். ரோஸ்மேரியோட ரெண்டு குழந்தைங்க அழுதுக்கிட்டே பக்கத்து தெருவுல உள்ள தன்னோட தாத்தா வீட்டுக்கு போய்ருக்காங்க. குழந்தைங்க அழுகுறத பாத்து அதிர்ச்சியடைஞ்ச தாத்தா, எதுக்கு அழுகுறிங்க, ஏன் ரெண்டு பேர் மட்டும் தனியா வந்துருக்கிங்க, அம்மா கூட வரலையான்னு கேட்ருக்காரு. அதுக்கு அந்த குழந்தைங்க அம்மா வீட்ல மயங்கி கிடக்குறாங்க, தலை ஃபுல்லா ஒரே ரத்தமா இருக்குன்னு சொல்லி அழுதுருக்காங்க. இதகேட்ட தாத்தா, ரோஸ்மேரியோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அங்க ரோஸ்மேரி கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்துருக்காங்க. அப்ப வீட்ல, கணவர் சத்யராஜ் இல்ல. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கடுத்து இந்த சம்பவம் பத்தி போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. மனைவி உயிரிழந்து கிடந்த நேரத்துல சத்யராஜ் வீட்ல இல்லாதது, போலீஸ்க்கு சந்தேகத்த ஏற்படுத்திருக்கு.அதுக்கப்புறம் சத்யராஜ் எங்க இருக்காருன்னு தெரிஞ்சுக்க போலீஸ் அவர பல இடங்கள்ல தேடிருக்காங்க. ஆனா எங்க தேடியும் சத்யராஜ காணல. இதனால அவரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி தேடிருக்காங்க. அப்ப சிக்னல் திருவள்ளூர், ஆரம்பாக்கம் பகுதியில காட்டிருக்கு. இதனால உடனே அங்க போன போலீஸ், அங்கொரு வீட்ல பதுங்கியிருந்த சத்யராஜ கையும் களவுமா பிடிச்சு தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. சென்னை, போரூர் சிவன்கோவில் தெருவை சேந்த சத்யராஜ், கார் டிரைவரா வேலை பாத்துட்டு இருந்தாரு. இவருக்கு ரோஸ்மேரி-ங்குற மனைவியும் ரெண்டு பசங்களும் இருக்காங்க. குடும்பத்துக்காக ராப் பகலா கஷ்டப்பட்டு உழைச்ச சத்யராஜ், நாள்போக்குல வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகிட்டாரு. அடுத்து எந்நேரமும் மது குடிச்சுட்டு வீட்டுக்கு வர்றது, குடிபோதையில மனைவி, பிள்ளைகள போட்டு கண்மூடித்தனமா தாக்குறது, சம்பாதிக்குற பணத்த வீட்டு செலவுக்கு கொடுக்காம அலட்சியமா இருக்குறதுன்னு மனைவிய போட்டு ரொம்ப சித்ரவதை பண்ணிட்டு இருந்துருக்காரு சத்யராஜ்.இதனாலையே கணவன் மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. அதுமட்டும் இல்லாம ரோஸ் மேரி எந்த ஒரு வேலையும் இல்லாம, செல்போன்ல வாட்ஸ் அப், இன்ஸ்ட்டா ரீல்ஸ் பாத்துட்டு இருந்ததா கூறப்படுது. எந்நேரமும் செல்போன் யூஸ் பண்ணிட்டு இருந்ததால, கணவனுக்கு அவங்க மேல சந்தேகம் ஏற்பட்டிருக்கு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி கணவன் வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பிருக்காரு. அப்ப ரோஸ்மேரி யார் கிட்டயோ ஃபோன்ல பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து கடுப்பான சத்யராஜ் இந்த நேரத்துல யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு சொல்லி சண்டை போட்ருக்காரு. அதுக்கு ரோஸ்மேரி நான் என் அம்மா கிட்ட தான், பேசிட்டு இருந்தேன், நீங்க நினைக்கிற மாதிரி நான் யார் கிட்டயும் பேசலன்னு சொல்லிருக்காங்க. ஆனா அத நம்பாத சத்யராஜ் மனைவிய போட்டு கண்மூடித்தனமா அடிச்சுருக்காரு.சம்பவத்தன்னைக்கு நைட்டு தன்னோட ரெண்டு பசங்களையும் தூங்க வச்சுட்டு கணவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க ரோஸ்மேரி. அப்ப ஃபுல் போதையில வீட்டுக்கு திரும்புன சத்யராஜ், மனைவி மேல சந்தேகப்பட்டு மறுபடியும் பிரச்னை பண்ணிருக்காரு. ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் ஏற்பட்டுருக்கு. அப்ப அவங்க மேல கொலை வெறியான கணவன், மனைவிய போட்டு கொடூரமா தாக்கிருக்காரு. அடுத்து கீழ கிடந்த ஒயர எடுத்து மனைவியோட கழுத்த நெரிச்ச கணவன், அவங்க தலைய பிடிச்சு வீட்டு சுவற்றுல பல முறை இடிச்சுருக்காரு. இதுல அதிகளவு ரத்தம் வெளியேறுனதால மனைவி சம்பவ இடத்துலையே துடிதுடிக்க உயிரிழந்துட்டாங்க. மனைவி உயிரிழந்தத பாத்து பயந்துபோன சத்யராஜ், சடலத்த என்ன பண்றதுன்னு தெரியமா நைட் ஃபுல்லா சடலத்து பக்கத்துலையே உட்காந்துட்டு இருந்துருக்காரு. அதுக்கப்புறம் காலையில அங்கருந்து ஆரம்பாக்கம் பகுதிக்கு தப்பிச்சு போய்ருக்காரு. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் கணவர் சத்யராஜ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.