ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூர் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறு காயங்களுடன் மாணவர்கள் உயிர்தப்பினர்.அன்னை ஸ்ரீ சாரதாதேவி என்ற தனியார் பள்ளி பேருந்து காலையில் 32 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற போது, மேலப்புலம்புதூர் பகுதியில் சாலை குறுகலாக இருந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து மாணவர்களை மீட்டனர்.இதில் நெற்றியில் காயமடைந்த ஒரு மாணவன் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.