திருச்சி மாவட்டம் தறையூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூடை உடைத்து , மன்னிப்பு வாசகம் எழுதி வைத்து விட்டு, மர்மநபர்கள், அவரது பைக்கை திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வம் நகரில் வசித்து வந்த தனியார் வங்கி மேலாளர் இளங்கோ, தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, வீட்டின் சுவரில் சாரி பிரதர் அண்ட் சிஸ்டர், மன்னித்து விடுங்கள் என எழுதி வைத்து விட்டு, வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை மட்டும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.