திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு காரணமாக, சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், தற்போது 20 முதல் 37 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.