கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 15 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 305 ரூபாய்க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 120 ரூபாய்க்கும் கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.