சென்னையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வைக் கண்டுள்ளது. இன்றைய காலை நிலவரம்...ஒரு சவரன் - ரூ.92,200 (+200)ஒரு கிராம் - 11,525 (+25)பிற்பகல் நிலவரப்படி... ஒரு சவரன் - ரூ.92,640 (+ரூ.440)ஒரு கிராம் - ரூ.11,580(ரூ.55)சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, ரூ.92,200க்கு விற்பனை ஆனது. பிற்பகலிலும் தங்கத்தின் விலை உயர்வை கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ரூ.92,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,580 ஆக இருந்தது. காலையில் வெள்ளியின் விலை;சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை, இன்று காலை ரூ.5,000 அதிகரித்து ஒரு லட்சத்து 95,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து 195 ரூபாயாக இருந்தது. பிற்பகலில் வெள்ளியின் விலை;ஒரு கிலோ வெள்ளியின் விலை, இன்று மாலை ரூ.2,000 அதிகரித்து, ஒரு லட்சத்து 97,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 197 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தங்கத்தின் விலை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உச்சபட்சமாக உயர்ந்து, வாடிக்கையாளர்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும், அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு, தங்க நகை ஆர்வலர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. கடந்த சில வாரங்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காலை, மாலை எனத் தொடர்ந்து இரு வேளையும் விலை உயர்ந்து உச்சத்தைத் தொட்டு வருகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ரூ.75,000த்தை தாண்டியது. 7ஆம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் மக்கள் கலக்கம் அடைந்தனர்.போட்டி போடும் வெள்ளியின் விலை...வெள்ளியின் விலையும் தங்கத்தைப் போலவே புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலை வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.1,97,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாறு காணாத ஏற்றமாகப் பார்க்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, உச்சத்தில் சென்று கொண்டிருப்பது நடுத்தர மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.https://xcom/NewsTamilTV24x7/status/1977680225191469501https://x.com/NewsTamilTV24x7/status/19776802https://x.com/i/status/197768022519146950125191469501