நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரிக்கு நாளை குடியரசுத் தலைவர் வருவதையொட்டி அங்கு ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். குன்னூர் ராணுவ கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் மற்றும் பல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வருகைத் தருகிறார். இவரது வருகை முன்னிட்டு, மேற்கு சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரம் போலீசார் உதகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.