தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த டி.சுப்புலாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். 50 சதவீதம் கூலி உயர்வு, 10 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.