கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளம் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாப்பையம்பாடி கிராமத்தில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.