வடமாநில கொள்ளையனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், சிறப்பாக செயல்பட்ட நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணா உட்பட காவல்துறையை சேர்ந்த 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். கேரளாவில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்களை நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, நடைபெற்ற என்கவுன்ட்டரில் கொள்ளையன் தாக்கியதில் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.